தேசம் விட்டு தேசம் வாழும்அகதிக்கூட்டத்தில்
இதோ இருக்கிறேன் நானும்.
கூட்டமில்லா பேருந்து
தூசியில்லாத காற்று
வீட்டுக்கே வரும் உணவு
பகட்டான உடை
போதுமென்ற பணம்
எல்லாம் இருக்கிறது இங்கு...
அம்மாவின் வாசம் நிறைந்த
ஒரு கவளம் சோறு
காய்ச்சல் நேரத்தில் நெற்றியில் பரவும்
அப்பாவின் உள்ளங்கை வெட்பம்
மழை நேரத்தில் கிடைக்கும்
சகோதரிகளின் சூடான தேனீர்
பார்த்த உடன் கால்களை கட்டிக்கொள்ளும்
அக்காவின் குழந்தை
இழக்க வேறெதுவுமில்லை இங்கு இந்நிமிடத்தில்.
machi ultimate da....!
ReplyDeletepaaren unakulleyum ennamo irukku...! :)
ippadikku - oun uyir(edukkum) nanban - Dilli