-----------------------
நல்லதாய் ஒரு
வேலையில்லை
அழகாய் ஆங்கிலம்
பேசதெரியவில்லை
உட்கார வைத்து
ஊர்சுற்ற வண்டியில்லை
பெற்றவர்கள் தலையாட்ட
ஒரே ஜாதியுமில்லை
இதையெல்லாம் நீ
அன்றே சொல்லிருக்கலாம்
உனக்காக முதல்முதலாய்
50 ரூபாய்க்கு ரீசார்ஜ்
செய்த நாளன்று.
-----------------------
நீ இல்லையென்றால்
செத்துவிடுவேன் என
உன்னிடம் கதறியழுதேன்
நம்பாமல் உன்
திருமண அழைப்பிதழை
முகத்தில் வீசிச்சென்றாய்
நான் இறந்தபின்
என் இரங்கல் கூட்டத்தில்
கூறினாய் எனை
நம்புவதாக...
-----------------------
முன்பு
உன்னைப்பார்க்க வேண்டும் என்பதே
என் வேண்டுதலாய் இருந்தது.
இன்று
உன்னை பார்த்துவிடக்கூடாது என்பதே
என் வேண்டுதலாய் இருக்கிறது.
----------------------------
தாடி வைப்பது
காதல் தோல்வியின்
அடையாளம் என்றனர்.
தாடியே முளைக்காத
நானெல்லாம் என்ன செய்வது.
-- டவுசரை அடகு வைத்து காதலிப்போர் சங்கம்.
Tuesday, May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ரொம்ப நல்லா இருக்குடா, நீ இதெல்லாம் ஒரு புத்தகமா போடா நல்ல வரவேற்பு இறுக்கும்
ReplyDeleteநல்லாருக்கு நண்பரே...
ReplyDeleteமிக மிக ரசித்தேன்...
அந்த சங்கத்தில நானும் மெம்பர் ஆக முடியுமா...??
:-)
இந்த மாதிரி எல்லா பதிவுகளும் படிச்சா நீங்களும் மெம்பர்தான்
ReplyDeleteவருகைக்கு மிகவும் நன்றி..
@Vinod
ReplyDeleteஒரு ஆயிரம் தாண்டட்டும் டா. நீயே ஸ்பொன்சர் பண்ணு :)
ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteதப்பித்தாள் ஒரு தேவதை
@ பிரேமா மகள்:
ReplyDelete:)