கவிதைகளை எல்லாம்
ஒரே மூச்சில் படித்துவிட்டு
எப்படி இத்தனை கவிதை
எழுதினாய் என்று
கேட்டாய் என்னிடம்!
உன் செயல்கள் அனைத்தையும்
வார்த்தைகளாய் மாற்றினாலே
ஒரு கவிதை தோன்றிடும் என்றேன்.
அய்யே! என உதடு சுழித்து
கண்கள் மூடி திறந்தாய்
எனக்குள் இன்னொரு
கவிதை பிறக்கத்தொடங்கியது...
...................................
அழகாய் கவிதை
எழுத மட்டுமல்ல,
மற்றவர் அறியாமல்
அழவும் கற்றுக்கொடுத்திருக்கிறது,
உன் பிரிவு!.
................................
அன்றொரு நாள் சாலையை கடக்கும்போது
வேகமாய் சென்ற வாகனத்திற்கு அதிர்ந்து
என் கையை இறுகப்பற்றிக்கொண்டாய்.
அதுவரை நம்மை வேடிக்கை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்தது காதல்.
ஏனோ வீடு திரும்பும்வரை
கையை விடவேயில்லை இருவரும்.
வழியெங்கும் மௌனப்பூக்களை
இறைத்தபடியே நடந்தோம் நாம்.
நம்மோடு சேர்ந்து நடக்க
ஆரம்பித்து விட்டிருந்தது காதல்.
வீடு சேர்ந்தபிறகு அருகருகே
அமர்ந்து கொண்டோம் இருவரும்.
கதவை தாழிட்டுவிட்டு நமக்கு நடுவே
அமர்ந்து கொண்டது காதல்!.
ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுதினாலும் ஒரு நல்ல punch இருக்கு எழுத்தில்.
ReplyDelete"வழியெங்கும் மௌனப்பூக்களை இறைத்தபடியே நடந்தோம் நாம்" என்னும் வரி மிக மிக அருமை
ரொம்ப நன்றி நண்பா!
ReplyDeleteromba azhaga iruku... vaazhthukkal
ReplyDeleteமிக நன்றி நிலா!
ReplyDeleteயாருங்க அந்த பொண்ணு?
ReplyDelete@பிரேமா மகள்:
ReplyDeleteகவிதைக்கு சொந்தக்காரியின் பெயரை சொன்னா சுவாரசியம் போய்டுமே.
Dei... Kalakkuriye da..
ReplyDelete