உடைந்த இதயத்திலிருந்து
சில்லுகளாய் விரிகிறது
உனது முகம்
வழியும் குருதியை
ரசித்துக் குடிக்கின்றது
உன் நினைவுகள்
இரவு கைநீட்டி
துடைத்தது போக
கொஞ்சம் தலையணைக்கும்
உணவாகிறது என்
கண்ணீர் துளிகள்.
கைப்பிடித்து நாம் நடந்த
பாதையில் இன்று நான்மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறேன் நம் காதலை.
தொலைந்து கொண்டிருந்த
என்னை மீட்டெடுத்தது
உன் காதல்
இன்று தொலைந்து போக
நாள் குறிக்கச் சொல்கிறது
உன் பிரிவு.
காணும் அனைத்தையும்
ஓவியமாய் அறியச்செய்தது
உன் அருகாமை
இதுவரை அறியாத
வலிகளை உணரச்செய்கிறது
என் தனிமை
நீ எனக்களித்த
துயரங்களை மௌனமாய்
ஏற்றுக்கொண்டுவிட்டேன்
சத்தமிடும் இதயத்திற்கு மட்டும்
ஒருமுறை உணர்த்திவிடு
ஏனிந்த தண்டனை என்று.
நீ கொடுத்த வாழ்கையை
நீயே எடுத்துக்கொள்
காதலும் கண்ணீரும் கலந்து
அது கணக்கும் வலி தாளவில்லை.
நீ வைத்த செல்லப்பெயரை
நீயே எடுத்துக்கொண்டபின்
என் உடம்பிற்கு மட்டும்
ஒரு பெயர் வைத்து
அழைதுக்கொண்டிருக்கிறது
இந்த உலகம்.
Friday, April 30, 2010
கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...
Subscribe to:
Post Comments (Atom)
மனம் கனக்கிறது...விமல்.மிகவும் அருமையான கவிதை.உங்க வலைதளத்தை நீங்க கவிதைக்காகவே வெற்றிநடை போடலாம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteplease remove the word verification in comment page.
ReplyDeleteரொம்ப மகிழ்ச்சி பாரதி பரணி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
word verification disable செய்து விட்டேன்.