தூங்கும்போது பெண்கள்
இன்னும் அழகு என்று
படித்ததாய் நியாபகம்.
நீ தூங்கும்போது
தூங்காமல் நான் உன்னை
ரசித்தபோது அதை உண்மையென்று அறிந்தேன்.
சிறு சப்தத்துக்கும்
திடுக்கிட்டு நீ செய்த
முகச்சுளிப்பில் ஓவியங்களும் தோற்றுப்போயின.
காற்றின் வேகத்தில்
ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
உன் முடிக்கற்றைகளை
என் விரல்களால் அதட்டுகிறேன்.
குளிர தொடங்கும் வேளையில்
மெலிதாய் நடுங்க ஆரம்பிக்கும்
உடலுக்கு என் போர்வையும் போர்த்தி
உன் குளிரையும் நான் ஏற்கிறேன்.
மறுநாள் உன்னை எப்படி
மகிழ்விக்கலாம் என்றேண்ணியே
என் முக்கால்வாசி இரவுகளும் இறக்கின்றன.
"என்னடா தூக்கம் வரலையா" என்று
கேட்டபடியே நீ என்னை
நெஞ்சோடு அனைத்துக்கொள்ளும்போது
விடியத்தொடங்கிவிடுகிறது என் வானம்.
Friday, April 30, 2010
தூங்கும் தேவதையே...
Subscribe to:
Post Comments (Atom)
:-) good one!
ReplyDeleteவருகைக்கு நன்றி :)
ReplyDeleteரொமாண்டிக்கான கவிதை..:)
ReplyDeleteகேபிள் சங்கர்
நம்பவே முடியல கேபிள்ஜி... நீங்கதானா
ReplyDeleteமிகவும் நன்றி.
ஹலோ விமல்
ReplyDeleteஎன்னை நினைவிருகிறதா
உனக்குள் இததனை கவிதன்மயா
கலகிட்ட போ
வாழ்த்துகள்
உங்களை மறக்க முடியுமா ஆர்த்தி?
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
அழகான கவிதைங்க....வாழ்ந்து எழுதுன மாதிரி இருக்கு....தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப நன்றி பரணி பாரதி
ReplyDeleteஇப்படி கவிதை எழுதினா.. மத்தவங்க எப்படி மக்கா தூங்குவாங்க?
ReplyDelete:)
ReplyDelete